Tuesday, March 27, 2012

திருமணத்தைத் தள்ளிப் போடும் பெண்கள்

/* அண்மையில் Facebook குழு ஒன்றில் பிடித்துப் படித்தது. வெறுமனே படித்து மறக்க அல்ல. அறிந்தவர்-தெரிந்தவரிடம் அவசியம் பகிர்ந்து கொள்ளவும்.  */


மணல் கயிறு’ திரைப்படத்தில் ஹீரோ எஸ்.வி.சேகர், தனக்கு வரப்போகிற மனைவி இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று பத்து கண்டிஷன்கள் போடுவார். திருமண மார்க்கெட்டில் மாப்பிள்ளைகள் கண்டிஷன் போடும் காலமெல்லாம் இன்று மலையேறிவிட்டது. இது அப்படியே தலைகீழாக மாறி இப்போது திருமண மார்க்கெட்டில் பெண்கள்தான் தனக்கு வரும் மாப்பிள்ளை இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று ஆயிரத்தெட்டு கண்டிஷன்கள் போடுகிறார்கள்!...

சென்னையில் ஒரு மேரேஜ் மேட்சிங் சென்டர் நடத்தி வரும் அனுபவமிக்க ஒருவரின் வார்த்தைகளைக் கேட்போம் வாருங்கள்.

எங்களது மேரேஜ் சென்ட்டரில் இதை ஆரம்பித்த 14 வருடங்களாக பெற்றோர்களை நேராக வரச்செய்து பதிவு செய்யும் முறையை ரொம்பவும் ஸ்ட்ரிக்டாக வைத்திருக்கிறேன். சமயங்களில் பெண், பையன்களையும் நேராக ஆபீஸிற்கு வரச் சொல்லி பேசிப்பார்ப்பேன். பெண்கள், பையன்களுக்கு அன்றைக்கிருந்த மனநிலைக்கும், தற்போது இருக்கும் மனநிலைக்கும்தான் எத்தனை வேறுபாடுகள் தெரியுமா...மாப்பிளைகள் அடங்கி ஒடுங்கி திடுமணம் என்றாலே பயப்படும் அவல நிலை தான் இன்றைய சமுதாய வளர்ச்சி.

உதாரணமாக சமீபத்தில் தன் பெண்ணுக்கு ரிஜிஸ்டர் செய்ய வந்த பெண்ணின் தாயார் சொன்னது இது...
‘‘போன மாசம் எங்க பெண்ணுக்கு ஒரு இடம் பார்த்து நிச்சயம் பண்ணினோம். நாலு மாசம் கழிச்சு கல்யாண தேதி குறிச்சிருந்தோம். ஃபோன்லே பேசிக்கிட்டதிலே அந்தப் பையன் பேச்சு எங்க பொண்ணுக்கு பிடிக்காம போச்சு. இந்தக் கல்யாணமே வேண்டாம்னுட்டா, நாங்களும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் முடியாமத்தான் மறுபடி ரிஜிஸ்டர் செய்ய வந்தோம்’’ என்றார்கள் அந்தப் பெற்றோர்.
‘‘அந்தப் பையன் அப்படி என்னதான் பேசினாராம்!’’
‘‘வேறொண்ணுமில்லை வீட்டிலே ‘குக்’ இருக்கான்னு எங்க பொண்ணு கேட்டிருக்கா. அதுக்கு அந்தப் பையன் ‘குக் இருக்கு. ஆனா அவ லீவு போட்டா நீ ஏதாவது செய்யறாப்லே இருக்கும்’னு சொல்லி இருக்கான். அது எங்க பொண்ணுக்குப் பிடிக்கலே. ‘குக் லீவு போட்டா எங்க அம்மா பார்த்துக்குவாங்க’ன்னு சொல்ல வேண்டியதுதானே, அல்லது அவன் தானே சமைக்க வேண்டியது தானே?. நான் செய்யணும்னு ஏன் எதிர்பார்க்கறான்? இன்ன கம்பெனியிலே வேலை பார்த்து இவ்வளவு ஆயிரம் சம்பாதிக்கிறேன். எங்கிட்டேயே (!) இவ்வளவு பேசறான். சமைக்கணும், காஃபி போடணும்னா பேசாம கிராமத்திலே போய் படிக்காத பெண்ணைப் பார்க்க வேண்டியதுதானே’ன்னு கேட்கறா. அவ சொல்றது எங்களுக்கும் நியாயமா (!) படுது’’ என்று தன் பெண்ணின் மனநிலை தெரிந்தும் விட்டுக் கொடுக்காமல் பேசினார் அந்த அம்மா!...

அடுத்து ஃபைல் பார்க்க வந்த பெண்ணுக்கு வயது 32 இருக்கும். ‘‘நீங்க கொடுத்த அந்த ஜாதகம் பொருந்தி வந்ததுன்னு அப்பா, அந்தப் பையனோட செல் நம்பர் கொடுத்தார். பேசிப்பார்த்தேன். ஆனா சரிப்பட்டு வரமாட்டான்னு தோணுது. (மாட்டார் என்பதெல்லாம் இப்போது இல்லை) நேத்து நான் மூவி போனேன்னு அவன்கிட்டே சொன்னேன். ‘யார்கூட போனே?’ன்னு கேட்டான். இந்த மாதிரி கேட்கக்கூடாதுங்கிற மேனர்ஸ் கூடத் தெரியலே! ஐ வாண்ட் மை ஸ்பேஸ். எனக்கு ரொம்ப ப்ராட் மைண்டட் பையன்தான் மேடம் ஒத்து வருவான்!’’ என்று வேகமாகப் பேசினாள் அந்தப் பெண்.

இது மட்டுமல்ல... இதுபோல் எத்தனையோ விதமான டயலாக்குகளை நான் கேட்டு வருகிறேன்.

கல்யாணத்திக்கு பின் நான் அவனுடைய பெற்றோர்களை ஏன் அப்பா அம்மா என்று கூப்பிடவேண்டும் எனக்குத்தான் என் அப்பா அம்மா இருக்கிறார்களே ?. 

எனக்கு என் காரியரும் ஃபைநான்ஷியல் இன்டிபெண்டன்சும் தான் முக்கியம். நான் லைஃப்ஐ என்ஜாய் பண்ண வேண்டும். முப்பது வயதுக்கு மேல் பார்க்கலாம். 

‘‘எனக்கு லைஃப்லேயே பிடிக்காத வார்த்தை காம்ப்ரமைஸ். நான் எதுக்காக காம்ப்ரமைஸ் பண்ணிக்கணும். அப்படி ஒரு லைஃப் எனக்குத் தேவையே இல்லை’’ என்றாள் ஒரு பெண். அவளும் 32 வயதை நெருங்குகிறாள்....

ஒரு பெற்றோரே வந்து சொன்ன விஷயம் இது.... ‘‘எங்க பொண்ணு அட்ஜஸ்ட்டபிள் டைப் இல்லே. அதை இப்பவே சொல்லிடறோம். அதனால பேரண்ட்ஸ் இல்லாத இடமா ஏதாவது இருக்கான்னு பாருங்க.... அல்லது வெளியூரிலே குடும்பம் இருந்து பையன் மட்டும் இங்கே வேலைபார்க்கற மாதிரி பையன் இருக்கா?’’ என்றார்கள்...

இன்னொரு பெற்றோர் ரொம்பத் தெளிவாகச் சொன்னார்கள்... ‘‘எங்க பொண்ணு சமைப்பாள்னு எதிர்பார்க்க வேண்டாம். அவளுக்கு காஃபி கூட கலக்கத் தெரியாது.’’ இதைச் சொல்லிடுங்க முதல்ல! என்றார்கள். 

‘‘எங்க பொண்ணு மூட் வந்தா நல்லாவே குக் பண்ணுவா. அவளுக்கு சமைக்கத் தெரியும். ஆனா சமைக்கப் பிடிக்காது’’ என்று சொல்லும் பெற்றோர்...

‘‘எங்க பொண்ணு ரொம்பவே இன்டிபெண்டண்ட். அவளை யாராவது ஏதாவது கேள்வி கேட்டாலே பிடிக்காது’’ என்று சொல்லும் பெற்றோர்.

‘‘எங்க பொண்ணுக்கு கடவுள் நம்பிக்கை சுத்தமா கிடையாது. இதை பையன் வீட்டிலே சொல்லிடுங்க. அவங்க விளக்கு... கிளக்கு ஏத்தச் சொல்லப் போறாங்க. அப்புறம் ‘மூட் அவுட்’ ஆயிடுவா’’ என்று தகவல் தரும் பெற்றோர்...

இதையெல்லாம் பார்க்கும்போது திருமணத்தைப் பொறுத்தவரை இன்றைய இளம் பெண்களின் சிந்தனை எவ்வளவு மோசமாக மாறிப்போயிருக்கிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது. 

இதுதானா பெண்கள் சுதந்திரம் தந்த பரிசு ?.

வரனுக்காக ரிஜிஸ்டர் செய்துவிட்டுப் போனால்கூட, பையன் வீட்டினர்தான் திரும்ப போன் அடித்துக் கூப்பிட்டு ‘வரன் ஏதாவது வந்திருக்கா? என்று பொறுப்பாக கேட்கிறார்கள். பெண் வீட்டினருக்கு நானே போன் போட்டு பேசினால்கூட பொண்ணு ஃப்ரைடேதான் வருவா... சண்டேதான் பேசணும்... சும்மா பேசினா மூட் அவுட் ஆயிடுவா... அப்புறம் இந்த வீக் எண்டே வேஸ்டா போயிடும் என்பார்கள். இன்னும் சிலர் ‘‘நீங்களே என் பொண்ணுகிட்டே பேசி அவ மைண்ட்ல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்குங்களேன்...!’’ என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

இன்று திருமணம் குறித்த பெண்களின் எதிர்பார்ப்பு டோட்டலாக மாறிவிட்டது...

‘இவர்தான் இனி நம் வாழ்க்கை... என் சந்தோஷமோ துக்கமோ இவர்கூடத்தான்!...’ என்று தன் வருங்காலத் துணையை தன் ‘பாதுகாப்பாக’ நினைக்கும் மனோபாவம் முற்றிலுமாகப் போய்விட்டது.

‘‘இன்று லைஃப்ல எனக்குன்னு நான் ஒரு செக்யூரிட்டி ஏற்படுத்திட்டுதான் கல்யாணத்துக்கு ஓ.கே. சொல்வேன்!’’ என்று சொல்கிறார்கள் பெண்கள்.

பெரும்பாலான பெண்கள் திருமணத்தைத் தள்ளிப்போடச் சொல்லும் காரணமே, இந்த ‘செக்யூரிடி’தான். ‘‘ஒரு ஃப்ளாட் புக் பண்ணிட்டேன்... அதுக்கான கமிட்மெண்ட்ஸ் கொஞ்சம் இருக்கு... என்ன இருந்தாலும் எனக்குன்னு ஒரு செக்யூரிடி வேணும்!...’’ என்கிறார்கள்.

தவிர இப்போது பல பெண்கள் வேலை, புராஜெக்ட் என்று வெளியூர், வெளிநாடுகளுக்கு போய்விட்டு வருவது சகஜமாகி விட்டது. அங்குள்ள வாழ்க்கை, வசதி, சுதந்திர மனப்பான்மை இவற்றை அப்படியே பிடித்துக்கொண்டு நம் கலாச்சாரத்திலும் அதை அப்படியே எதிர்பார்க்கிறார்கள்... தன்னை யாரும் பேச்சில்கூட கட்டுப்படுத்தக்கூடாது என்றும் நினைக்கிறார்கள்.

உதாரணமாக சினிமாவுக்கு யாரோட போனே? என்று கேட்ட பையனை நிராகரித்த பெண்!...

சொல்லப் போனால் இப்போதெல்லாம் பெண்ணைப் பெற்ற (ஒரு சில) பெற்றோரின் மனப்பான்மைகூட மாறி விட்டது... ‘ஐயோ... பொண்ணுக்கு இருபத்தி ஐந்தாச்சே... கல்யாணம் பண்ணிக் கொடுக்கணுமே!’ என்று பெற்றோர் கவலைப்பட்ட காலம் போய், இப்போது 29, 30 ஆனாலும்கூட வற்புறுத்த மாட்டேன் என்கிறார்கள். சிலர் இன்னும் ஓரிரு வருடங்கள் பெண் இருந்தால் வீட்டு கமிட்மெண்ட்ஸ் எல்லாம் முடித்துவிட்டு நாமும் கொஞ்சம் வாழ்க்கையை என்ஜாய் பண்ணலாம்!’’ என்று பேசாமல் இருந்து விடுகிறார்கள். அனைவரையும் சொல்லவில்லை... ஒருசில பர்சன்டேஜ்தான்!...

இன்றைய பெண்களிடம் ‘இது நிச்சயம் ஒரு வெற்றிகரமான திருமணமாக அமையும்!’ என்ற நம்பிக்கை இல்லை. 

நல்ல படிப்பு, நல்ல நிறுவனத்தில் வேலை, சுறுசுறுப்பான பையன் இதுபோன்ற அஸ்திவாரங்கள் நன்றாக இருக்கிறது. என் எதிர்கால மணவாழ்க்கை 40, 50 வயதுகளிலும் சிறப்பாகவே இருக்கும் என்று நினைக்காமல் ‘ஹைட் 2 இன்ச் கூடுதலாக எதிர்பார்க்கிறேன். கலர் கொஞ்சம் பத்தாது’ என்று தான் எடுக்கப்போகும் திரைப்படத்திற்கு ஹீரோ செலக்ட் பண்ணும் பாணியில் கணவரை செலக்ட் பண்ணுவது.

தனக்கு வரப் போகும் கணவர் இந்த மாதிரி நல்ல படிப்பு படித்து, வேலையில் இருக்கிறார், நல்ல ஒழுக்கத்துடன் வளர்க்கப்பட்டிருக்கிறார் என்றால் அதற்கு அவரது பெற்றோர்களின் பொறுமை, தியாகம், அன்பு காரணம் என்கிற அடிப்படை உண்மையை மறந்துவிட்ட மாதிரியாய், ‘பேரண்ட்ஸ் கூட இருந்தா சரியா வராது தனிக்குடித்தனம் தான் ஒரே வழி.’ என்று பேசுவது.

இவ்வாறெல்லாம் சிந்தித்து வயசு கூடிக் கொண்டே போய் திருமணம் முடிப்பதால் இவர்கள் வாழ்க்கையில் இழப்பது என்னென்ன தெரியுமா? இதோ 

பெற்றோருக்கும் வயது ஏறிக்கொண்டே போவதால் அவர்களுக்கும் 60 வயதுக்கு மேல் ஆகி உடல் நலக்குறைவால் அவதிப்படுவது. 

வயது காலத்தில் பெற்றோர் ஆதரவில் சீரும் சிறப்புமாக நடக்க வேண்டிய திருமணத்தை பெற்றோரின் வயோதிகம் அல்லது இழப்பு காரணமாய் தானே நடத்திக் கொள்ள வேண்டிய துர்பாக்ய நிலை.

கருத்தரிக்க வேண்டிய வயது தாண்டி விடுவதால் ஒரு குழந்தையை கண்ணால் பார்க்க கருத்தரிப்பு மையம், மருத்துவர், மருத்துவப் பரிசோதனை என்று அலைச்சலுக்கு அலைச்சல், மன உளைச்சல், செலவுக்கு செலவு போன்ற துன்பங்களுக்கு ஆளாதல்.

படிக்க வைத்து ஆளாக்கி நிம்மதிப் பெருமூச்சு விட வேண்டிய நேரத்திலிருக்கும் 60 + வயது பெற்றோர்கள் மகளின் திருமணத் தடையால் ஒருவித குற்ற உணர்விற்கு ஆளான மாதிரி உறவினர் நண்பர்களை ஒதுக்கி தனிமைப்பட்டு மன உளைச்சலால் பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். 
இதனால் பெற்றோரின் சந்தோஷத்தை, நிம்மதியான வயோதிக வாழ்க்கையை அனுபவிப்பதைப் பார்க்கும் வாய்ப்பையே இந்தப் பெண்கள் இழக்கிறார்கள்.

இதுதானா பெண் குழந்தைகள் பெற்றோருக்கு அளிக்கும் பரிசு !. 
அவர்கள் இந்த நிலைமையில் வசதியாக இருக்கக் காரணமான பெற்றோர்களை நிரந்தர நோயாளியாக்கும் நிலை மாறுமா?. சிந்திப்பார்களா பெண் குழந்தைகள் !
காலமும் கடவுளும் தான் பதில் சொல்ல வேண்டும்.

முதலில் தன்னை முழுமையாக நம்பி, தன் மீது நம்பிக்கை வைத்த பெற்றோரை / குடும்பத்தை, கணவரை நம்பி, தெய்வ பலம் / குரு பலம் துணை நிற்கும் என்று உறுதியாக நினைத்து 20 - 25 வயதுகளில் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் நிச்சயமாக வெற்றிகரமான மணவாழ்க்கை வாழ்வார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய இறைஞ்சுவோம். || ईश्वरो रक्षतु||.

Sunday, September 11, 2011

பித்ரு பூஜைகளின் பலன்கள்


மறுபிறவிகள் எடுத்தாலும் அல்லது முக்தியை அடைந்தாலும் அல்லது பித்ருலோகத்திலேயே இருக்கும் காலத்திலும் நம் பித்ரு பூஜைகள் எவ்விதம் அவர்களைச் சென்றடைகின்றன

சரீரத்தை விட்டுவிட்ட ஜீவன் மரணமடைந்த தினத்திலிருந்து ஒன்பது நாட்கள் சரீரம் இல்லாமல் இப்பூவுலகிலேயே வாசம் செய்கிறது. இந்த ஒன்பது நாட்களும் அந்த ஜீவனின் பசி, தாகம் ஆகியவற்றைப் போக்குவதற்காகவேதான் விசேஷ பூஜைகளைச் செய்கிறோம். பத்தாவது தினத்தன்று அந்த ஆத்மாவிற்குக் கட்டை விரல் போன்ற அளவும், அமைப்பும் கொண்ட சூட்சும சரீரம் ஏற்படுகிறது. அந்த சூட்சும சரீரத்தின் மூலம் அந்த ஆத்மாவின் மேல் உலகப் பயணம் ஆரம்பிக்கிறது. அன்றுதான் ஒரு சிறிய சடங்கு மூலம் அந்த ஜீவனுக்கு நாம் விடை கொடுத்து அனுப்புகிறோம்.

பின்பு சந்திரன், செவ்வாய் போன்ற பல கிரகங்களையும் கடந்து, ஆறாவது மாதம் அந்த ஜீவன் அழகான நீருற்றுகளும், சோலைகளும், அட்சயவடம் என்ற விருட்சங்களும், குன்றுகளும் நிறைந்த பித்ருக்களின் உலகை அடைகிறது. ஆறு மாத இடைவிடாத பயணத்தால் ஏற்பட்ட களைப்பு நீங்க அந்த ஜீவன் மனமகிழ்ச்சியுடன் பூமியில் தனது பிள்ளைகள். திதி பூஜையின் மூலம் அளிக்கும் உணவை(அமுதம்) உண்டு அதனால் மனநிறைவு பெற்றுத் தங்களுக்கு பக்தியுடன் உணவளித்ததற்காகத் தனது குழந்தைகளை ஆசீர்வதிக்கின்றது. 
 
சிறிது காலம் பித்ருக்களின் உலகில் தங்கி, இளைப்பாறி மனநிறைவு பெற்ற அந்த ஜீவன், மீண்டும், தன் பயணத்தைத் தொடர்கிறது. தான் உலகில் உடலைத் துறந்த ஓராண்டு முடிவில், அதே திதியன்று தர்மதேவதையின் வைவஸ்வதம் என்ற தலைநகரத்தை அடைகிறது. மிகப்பெரிய, புண்ணிய நகரமாகிய இதன் அழகையும், ஒளியையும், புனிதத்தையும் புராதன நூல்கள் விவரிக்கின்றன.

பூவுலகில் வாழ்ந்தபோது தெய்வத்திடம் பக்தி, சத்தியத்தைக் கடைப்பிடித்தல், மற்ற உயிர்களிடம் கருணை, திருக்கோயில்களைத் தரிசிப்பது, புனர்நிர்மாணம் செய்வது, புண்ணிய நதிகளில் நீராடுதல், பித்ரு பூஜைகளைத் தவறாது செய்தல்.... போன்ற புண்ணிய காரியங்களைச் செய்துள்ள உத்தம ஜீவர்களை தர்மராஜன் தங்கமயமான தனது சிம்மாசனத்திலிருந்து இறங்கிவந்து கையைப் பிடித்து அன்புடன் வரவேற்று, சம ஆசனமளித்து மரியாதை செய்து அவரவரது புண்ணிய காரியங்களுக்கேற்ப பிற புண்ணிய உலகங்களுக்கு அனுப்பி வைக்கிறார்.

அந்தப் புண்ணிய உலகங்களில், தாங்கள் செய்துள்ள நற்செயல்களுக்கு ஏற்ற காலம் வரை சுகங்களை அனுபவித்து, அந்த உத்தம ஜீவன்கள், மீண்டும் பூமிக்குத் திரும்பி முற்பிறவியைவிட உயர்ந்த பிறவியை எடுக்கிறார்கள். 
 
இதற்கு மாறாக, உலகில் வாழ்ந்தபோது மமதையினால் பாவம் செய்தவர்கள் புண்ணிய உலகங்களுக்குச் செல்லாமல் வேறு சில உலகங்களுக்குச் சென்றுவிட்டு மீண்டும் பூவுலகில் மனிதர்களாகவோ அல்லது பிராணிகளாகவோ அல்லது புழு, பூச்சிகளாகவோ பிறவி எடுக்கின்றனர்.

இவ்விதம் பிறவி, மரணம், மறுபிறவி என்ற பயணத்தின்போது அவரவர்களுடைய பிள்ளைகள், பெண்கள், பேரன்கள், பேத்திகள் செய்யும் பித்ரு பூஜையின் பலன்கள் சூரியபகவானால் நம்மிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டு, இதற்காக என்றே படைக்கப்பட்டுள்ள பித்ரு தேவதைகளின் திருக்கரங்களில் ஒப்படைக்கப்படுகின்றன. அவ்விதம் ஒப்படைக்கப்பட்ட பித்ரு பூஜா பலன்களைப் பித்ரு தேவதைகள் எடுத்துச்சென்று, நமது மறைந்த மூதாதையர் எங்கு இருக்கிறார்களோ, எப்பிறவி எடுத்திருக்கிறார்களோ, அதற்கு ஏற்ப உணவாகவும், நீராகவும் மாற்றிக் கொடுத்துவிடுகின்றனர். இதனால் பசி, தாகம் நீங்கி நமது முன்னோர்கள் மனநிறைவு அடையும்போது அந்தப் புண்ணியத்தின் பலனைப் பித்ரு தேவதைகள் ஏற்று சூரியபகவானிடம் அளித்துவிடுகின்றனர். சூரியன் அந்தப் பலனை நமக்குத் திரும்ப தந்துவிடுகிறார்.

நமது முன்னோர்களில் சிலர் மகத்தான புண்ணியத்தைச் செய்து, அதன் பலனாக பிறப்பு_இறப்பு அல்லாத முக்தி நிலையை அடைந்திருந்தால், அத்தகைய பித்ருக்களுக்கு நாம் செய்யும் பூஜா பலன்களை இறைவனே ஏற்றுக்கொண்டு, அதற்குப் பிரதிபலனாக, பல நன்மைகளை நமக்கு அளித்தருள்கிறான். 
 
நமது முன்னோர்களில் எவரெவர் முக்தி நிலையை அடைந்துள்ளனர் என்பதை நாம் தெரிந்துகொள்ள முடியாததால், பித்ரு பூஜைகளைத் தொடர்ந்து நாம் செய்யவேண்டும் என சப்தரிஷிகளும் உறுதியாகக் கூறியுள்ளனர்.

நாம் செய்யும் எந்தப் பித்ரு பூஜையும் வீணாவதில்லை. அதனால் திருப்தியும், மனநிறைவும், மகிழ்ச்சியும் அடைந்து, நம் பித்ருக்கள் நம்மை ஆசீர்வதிக்கும்போது, அந்த ஆசி நம்மை ஏராளமான துன்பங்களிலிருந்து காப்பாற்றி விடுகிறது.

ஆதலால்தான் பித்ருபூஜைகளின் மகத்தான புண்ணிய பலன் அளவற்றது என்பதையும், எக்காரணத்தைக் கொண்டும் பித்ரு பூஜைகளை விட்டுவிடக்கூடாது என்றும் மீண்டும், மீண்டும் வலியுறுத்தி வருகிறோம். 

Tuesday, August 9, 2011

எளிதில் தமிழ் கற்க -- facebook பக்கம்

எளிதில் தமிழ் கற்க -- facebook பக்கம்


இந்த பக்கத்தில் எளிதில் தமிழ்ச் சொற்கள் கற்க/பொருள் அறிய மற்றும் இலக்கிய ஆராய்ச்சிகள் நிகழ்கின்றன. 

அதனுடன் இணைந்து பயனடையலாமே?

Wednesday, July 6, 2011

மனிதாபிமனத்தினை தொலைத்து நிற்கும் மதுரை அலங்காநல்லூர்!

மதுரை அலங்காநல்லூரில் மிருகங்கள் காட்டு மிராண்டிகளால் கொடுமைப் படுத்தப்படுகின்றன என்று இன்றைய தினமலரில் முகப் பட படம் ஒன்று வெளியாகியுள்ளது. இது குறித்து நாம் மதுரை மாநகராட்சிக்கு மனு அனுப்பியுள்ளோம். மனுவின் நகல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Wednesday, June 29, 2011

"மறுபடியும்" -- பிரபுதேவா வாழ்வில் "மறுபடியும்"?

"மறுபடியும்" என்னும் திரைப்படத்தில் 'நிழல்கள்' ரவி மற்றும் ரேவதி வாழ்க்கையில் 'ரோகினி' என்ற நடிகை 'கள்ளத் தொடர்பு' புரியும் 'உல்லாச நாயகி'யாக சித்தரிக்கப்  படும் வில்லியாக வருவாள். இதே போல பிரபுதேவா வாழ்விலும் பதினைந்து ஆண்டுகள் வாழ்க்கைத் துணைவியாக இருந்த 'ரமலத்தினை' உதறிவிட்டு 'நயந்தாரவினை' கைபிடிக்க தயாராகி கொண்டிருக்கும் பிரபுதேவாவினை என்ன சொல்வது?

"மறுபடியும்" படத்தில் ரேவதியின் வீட்டு வேலைப் பெண் ரோகினியை பார்த்துக் கேட்கும் கேள்வி -- "உங்களுக்கெல்லாம் கல்யாணமான ஆண்கள் தான் வேண்டுமா?"

எங்கே போய்க் கொண்டிருக்கிறது நமது கலாச்சாரம்?

"இறைவன் இணைத்ததை மனிதன் பிரிக்காமல் இருக்கட்டும்"

ஒரு சில தினங்கள் முன் 'மொழி' என்னும் 'பிரகாஷ்ராஜ்' நடித்து ராதாமோகன் தயாரித்து வழங்கியிருந்த திரைப்படம் ஒன்றினை காண வாய்ப்பு கிடைத்தது.

திரைப்படத்தின் இறுதிக் காட்சிகளில் வரும் விவிலியப் பிரார்த்தனையாக கூறப்படும் இவ்வரிகள் "இறைவன் இணைத்ததை மனிதன் பிரிக்காமல் இருக்கட்டும்" மிகவும் மனதினை தொடும் வரிகள்.

Monday, June 27, 2011

இந்திய சாலை போக்குவரத்து குறித்த சில Facebook பக்கங்கள்

இந்திய சாலைகளில் பாதுகாப்பின்மை மற்றும் போக்குவரத்து காவலர்களின் நம்பகம் இல்லாத நிலைமை என்ற நமது நிலையில் போக்குவரத்து காவல் தலைமையகத்தின் நேரடி பார்வைக்கு நிலைமையை கொண்டு செல்லும் வழியில் Facebook  ல் சில பக்கங்கள் நமக்கு உதவுகின்றன. அவையாவன:

  1.  சென்னை போக்குவரத்து காவல் 
  2. (அகில இந்திய)  போக்குவரத்துக் குற்றவாளிகள்
  3. சிம்லா போக்குவரத்துக் காவல்
உங்களுக்கு தெரிந்த பக்கங்களையும் இணைய உதவி தளங்களையும் கருத்துகளாக பகிர்ந்து கொள்ளலாம்.